தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நாகப்பட்டினத்தில் 50,000 ஹெக்டேரில் குறுவை சாகுபடிக்கு இலக்கு' - ஆட்சியர் பிரவீன் நாயர்

நாகப்பட்டினம்: 50,000 ஹெக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என நாகப்பட்டினம் ஆட்சியர் பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார்.

ஆட்சியர் பிரவீன் நாயர்
ஆட்சியர் பிரவீன் நாயர்

By

Published : May 24, 2020, 11:21 AM IST

நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் தலைமையில் குறுவை சாகுபடி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் பகுதி விவசாயிகள் கலந்துகொண்டனர். அதையடுத்துக் கூட்டத்தில் குறுவை சாகுபடி குறித்து விவாதிக்கப்பட்டது.

அதில் ஆறு, வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படவில்லை, இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது, நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 37 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்தாண்டு மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் உரிய நேரத்தில் திறக்கப்படுவதால் 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்வதற்கு விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகிறோம்.

காவிரி நீர் கடைமடை பகுதி வரை செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குடிமராத்துப் பணி, தூர்வாருதல், மதகுகள் சீரமைப்பு என ரூ. 50 கோடிக்கும் மேல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'காவிரி நீர் சரியான நேரத்தில் திறக்கப்பட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மீட்கப்படும்'

ABOUT THE AUTHOR

...view details