மயிலாடுதுறை: கொள்ளிடம் ஒன்றியத்தில் அதிமுக ஒன்றிய கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ்.பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில், "99.5 சதவீதம் அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தனர். இதனால் பயந்த ஸ்டாலினுக்கு காய்ச்சல் ஏற்பட்டு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 13 கட்சி கூட்டணியுடன் 450 கோடி செலவில் வடநாட்டு அரசியல் ஆலோசனை கொண்டு பொய்யான 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை சொல்லி 3% வாக்குகள் அதிகம் பெற்று திமுக ஆட்சிக்கு வந்துள்ளது.
மாறாக வெற்றி வாய்ப்பை இழந்த போதிலும் 75 சட்டமன்ற உறுப்பினர்களை சட்டமன்றத்திற்கு அழைத்து சென்றவர் எடப்பாடி பழனிசாமி . மக்களுக்கு விரோதமான அரசு திமுக அரசு. கொடுத்த வாக்குறுதிகளில் 80% நிறைவேற்றி விட்டோம் என பொய் சொல்லுகிற திமுக அரசு தேர்தல் வாக்குறுதியான நீட் தேர்வு ரத்து, தாலிக்கு தங்கம், உள்ளிட்ட எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றவில்லை என குற்றச்சாட்டினார்.