மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் ஆயிரம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக இன்று (14.11.2022) மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் முதலமைச்சர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
ரேஷன் கார்டுக்கு ரூ.1000 மழை நிவாரணம்; சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாவுக்கு முதல்வர் அறிவிப்பு! - ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ 1000
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஆயிரம் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ரேஷன் கார்டுக்கு ரூ.1000 மழை நிவாரணம்; சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாவுக்கு முதல்வர் அறிவிப்பு!
மேலும் கடும் மழையினால் சேதமடைந்துள்ள பயிர்கள் முறையாக கணக்கெடுப்பு செய்யப்பட்டு, உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.