மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் சர்க்கரை ஆலை ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2018 ஜூலை மாதம் முதல் 2019 மே மாதம் வரையிலான ஊதிய நிலுவையில் உள்ள ஒரு வருட சம்பளத் தொகை வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற ஆலை ஊழியர்கள் போராட்டம் - fasting protest
நாகப்பட்டினம்: மயிலாடுதுறை அருகே மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சர்க்கரை ஆலை ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆலை ஊழியர்கள் போராட்டம்
மேலும், கரும்பு விவசாயிகளுக்கான ரூ.8 கோடி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். மூன்று வருடங்களாகச் செயல்படாத ஆலையை இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட சர்க்கரை ஆலையைச் சேர்ந்த அனைத்து வகை தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.