தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சூடான் தீ விபத்து; மகனின் உடலை மீட்டு தரக்கோரி கண்கலங்கிய தாய்!

நாகை:  சூடான் நாட்டின் செராமிக் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்த மகனின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தாய் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

sudan fire accident
sudan fire accident

By

Published : Dec 5, 2019, 12:03 AM IST

சூடான் நாட்டின் தலைநகரான கர்த்தூமில் செராமிக் ஆலையில் இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வந்தனர். இந்த ஆலையில் சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 18 இந்தியர்கள் உட்பட 23 பேர் உயிரிழந்தனர். 130 பேர் படுகாயம் அடைந்ததாக சூடான் அரசு தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் சிக்கியவர்களில் 18 பேர் இந்தியர்கள், அதில் மூன்று பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஏழு இந்தியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் நால்வர் மோசமான நிலையில் உள்ளதாகவும் இந்தியத் தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த ஒருவர் நாகை மாவட்டம், திட்டச்சேரி அருகேயுள்ள ஆலங்குடிச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பது தெரிய வந்துள்ளது. இவர் பொறியியல் படிப்பு முடித்துவிட்டு குடும்ப வறுமையின் காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சூடான் நாட்டின் டைல்ஸ் கம்பெனிக்கு வேலைக்குச் சென்றுள்ளார்.

மகனின் உடலை மீட்டு தரக்கோரி தாய் கண்ணீர்

இந்த தீ விபத்தில் ராமகிருஷ்ணன் உயிரிழந்த தகவலை அறிந்த தாய், 'யாரைத் தொடர்பு கொள்வது என்பது தெரியவில்லை. என் மகனின் உடலை பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும்' எனவும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:

சூடான் தீ விபத்து; கணவரின் உடலை மீட்டு தரக்கோரி மனு

ABOUT THE AUTHOR

...view details