தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மானியத்துடன் கூடிய வங்கிக் கடன்: தென்னை உற்பத்தியாளர்கள் கோரிக்கை - டெல்டா மாவடங்கள்

நாகப்பட்டினம்: கஜா புயலால் தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்க வேண்டும் எனத் தென்னை உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்னை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர்

By

Published : Apr 22, 2019, 9:05 AM IST

தமிழ்நாட்டில் 2018 நவம்பர் மாதத்தில் வீசிய கஜா புயலால், தஞ்சை, நாகை, திருவள்ளூர், புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்களில் உள்ள தென்னை விவசாயிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளும் மாநில அரசு அறிவித்திருந்த நிவாரணத் தொகை இதுவரை குறைந்த நபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், 70 விழுக்காடு விவசாயிகளுக்கு இதுவரை எந்த ஒரு நிவாரண தொகையும் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு விவசாயிகள் இடையே இருந்து வருகிறது.

தென்னை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர்
இதனால், தென்னை விவசாயிகள் எந்த வருமானமுமின்றி தற்போது வாழ வழியின்றி மிகவும் தவித்து வருகின்றனர். இந்தச் சூழலில், தென்னை உற்பத்தியாளர்கள் மற்றும் தென்னை சார்ந்த தொழிலாளர்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தென்னை சார்ந்த தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும், தென்னை விவசாயிகளின் வாரிசுகளுக்கு விவசாய பட்டயப் படிப்பின் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு தென்னை உற்பத்தியார்கள் சங்கம் சார்பில் மாநில அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர் சங்க மாநிலத் தலைவர் கமால் பாட்சா ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறுகையில், "வாழ்விழந்து நிற்கும் தென்னை விவசாயிகள் 25 வருடத்திற்குப் பின் தள்ளப்பட்டுள்ளோம். எனவே மாநில அரசு அவர்களுக்கு முழு மானியம் கொடுக்கவேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தார்.

ABOUT THE AUTHOR

...view details