கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் தொடக்கவேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் விவசாயிகளுக்கான கடன்களை மத்திய கூட்டுறவு வங்கிமூலம் வழங்க நடவடிக்கை எடுப்பதை கைவிடக்கோருவது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்டம் மயிலாடுதுறை கோட்டத்தில் உள்ள 64 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் இன்றிலிருந்து தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இப்போராட்டத்தில், வருமான வரித்துறையின் 2 விழுக்காடு டீடிஎஸ் வரியை ரத்து செய்யவேண்டும், அங்காடி பணியாளர்களுக்கு புதிய ஊதியம் வழங்க வேண்டும், நகை ஏல குறைவு தொகையை மற்ற வங்கிகளை போல் நட்ட கணக்கில் தாக்கல் செய்யவேண்டும், கூட்டுறவு நிறுவனங்களில் புதிதாக மேலாண்மை இயக்குனர் பணியிடம் உருவாக்கும் முயற்சியைக் கைவிடவேண்டும் என்பது போன்ற 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தொடர் போராட்டத்தை நடத்துவதாக தெரிவித்துள்ளனர்.