நாகை மாவட்டம் சீர்காழியில் மாநில அளவிலான தொடர் கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. கடந்த 15ஆம் தேதி தொடங்கி இரவு பகலாக நான்கு நாட்கள் நடந்த இப்போட்டியில் சென்னை, சேலம், திருச்சி, கிருஷ்ணகிரி, அறந்தாங்கி உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 40 அணிகள் பங்கேற்றது. இதன் இறுதிப்போட்டி நேற்று இரவு சீர்காழி தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
மாநில கூடைப்பந்து போட்டி - அறந்தாங்கி அணிக்கு கோப்பை! - nagai
நாகை: சீர்காழியில் மாநில அளவில் நடைபெற்ற கூடைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் அறந்தாங்கி ஃபைட்டிங் ஸ்டார் அணி முதலிடம் பிடித்து கோப்பையை வென்றது.
கூடைப்பந்து போட்டி
இறுதிப்போட்டியில் அறந்தாங்கி ஃபைட்டிங் ஸ்டார் அணியும், சென்னை ஆர்மி போலீஸ் அணியும் மோதியது. இதில் 57க்கு 58 என்ற புள்ளி கணக்கில் கூடுதலாக ஒரு புள்ளியை பெற்று அறந்தாங்கி ஃபைட்டிங் ஸ்டார் அணி வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை, பரிசு தொகையும் வழங்கப்பட்டது.