தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திராவிட மாடல் அடிப்படையில் சிறந்த ஆட்சி - அமைச்சர் மெய்யநாதன் - bjp

பாஜகவை வீழ்த்தக்கூடிய மாபெரும் சக்தியாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவெடுத்துள்ளார். திராவிட மாடல் அடிப்படையில் தமிழ்நாட்டில் சிறந்த ஆட்சியை அவர் வழங்கி வருவதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

திராவிட மாடல் என்ற தத்துவத்தின் அடிப்படையில் சிறந்த ஆட்சி- சிவ.வீ.மெய்யநாதன்
திராவிட மாடல் என்ற தத்துவத்தின் அடிப்படையில் சிறந்த ஆட்சி- சிவ.வீ.மெய்யநாதன்

By

Published : Nov 3, 2022, 6:24 AM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் திமுக உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு பேசினார். "பாஜகவை வீழ்த்தக்கூடிய மாபெரும் சக்தியாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவெடுத்துள்ளார்.

திராவிட மாடல் அடிப்படையில் தமிழ்நாட்டில் சிறந்த ஆட்சியை வழங்கி வருகிறார். கடந்த ஆட்சியாளர்கள் விட்டுச்சென்ற ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் கோடி கடன் மற்றும் கரோனா தொற்று ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஆகிய பிரச்சனைகளுடன் ஆட்சி பொறுப்பேற்று தற்போது சிறந்த ஆட்சியை முதலமைச்சர் வழங்கி வருகிறார்.

திராவிட மாடல் என்ற தத்துவத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் சிறந்த ஆட்சியை வழங்கி வருகிறார் என அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் புகழாரம்

சட்டப்பேரவை தொகுதியில் தீர்க்கப்படாத 10 பிரச்சனைகளை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு காண உள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் நாதல்படுகை, முதலைமேடு உள்ளிட்ட கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் உள்ள பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளை முதலமைச்சர் தீவிரமாக கண்காணித்து வருகிறார். 13 மாதங்களில் மக்களவைத் தேர்தல் வர உள்ள நிலையில் திமுகவில் இணைய ஆர்வமாக உள்ளவர்களை கட்சியில் இணைக்க வேண்டும் என கூறினார்.

இக்கூட்டத்தில், மயிலாடுதுறை எம்பி ராலிங்கம், திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன், எம்எல்ஏ பன்னீர்செல்வம் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:அரசியல் இல்லை - மம்தாவைச் சந்தித்தபின் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி

ABOUT THE AUTHOR

...view details