ஸ்ரீ முத்தாட்சி அம்மன் கோயில் திருவிழா! - ஸ்ரீமுத்தாட்சி அம்மன் கோயிலில் தீச்சட்டி
நாகை: மயிலாடுதுறையில் ஸ்ரீமுத்தாட்சி அம்மன் கோயிலில் தீச்சட்டி ஏந்தி நடன ஐதீக திருவிழா கரோனா கட்டுப்பாட்டால் எளிமையாக நடைபெற்றது.
ஸ்ரீ முத்தாட்சி அம்மன் கோயில்
ஸ்ரீஇராமர் பிறந்த அயோத்தி மாநகரிலிருந்து இடம்பெயர்ந்து வந்த பட்டாரியர்கள் சிவகங்கை மாவட்டத்தில் தங்கி, அங்கிருந்து மயிலாடுதுறை பகுதியில் குடியேறியதாகக் கூறப்படுகிறது. அதை நினைவுபடுத்தும் வகையில் மயிலாடுதுறையில் அவர்கள் தங்கியுள்ள பகுதிக்கு நாஞ்சில்நாடு என்று பெயரிட்டு வசித்துவருகின்றனர்.
இந்த ஆண்டு கரோனா பரவலைக் கருத்தில்கொண்டு வீதியுலா ரத்துசெய்யப்பட்டு கோயில் வளாக வாயிலில் விழா எளிமையாக நடத்தப்பட்டது. ஆலயத்திலிருந்து இருவர் தீச்சட்டிகளைக் கையில் ஏந்தியும், ஒருவர் பைரவருக்கான திரிசூலம் ஏந்தி நடனமாடியவாறும் விழா நடைபெற்றது. பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியவர்களை அம்மனாகப் பாவித்து வழிபாடு நடத்தினர்.