தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மொரட்டு சிங்கிள்களுக்கான பிரத்யேக உணவகம்! - மயிலாடுதுறை

நாகப்பட்டினம்: காதல் செட் ஆகாதுன்னு சொல்லும் மொரட்டு சிங்கிள்களுக்காகவே பிரத்யேகமான ஹோட்டல் ஒன்று மயிலாடுதுறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

mayiladurai

By

Published : Aug 3, 2019, 3:16 PM IST

Updated : Aug 3, 2019, 5:18 PM IST

மொரட்டு சிங்கிள் என்ற ஹேஸ்டாக் தற்போது இளைஞர்கள் மத்தியில் வைரல் ஆகிவருகிறது. காதலிக்காத இளைஞர்கள் மொரட்டு சிங்கிள் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பகிர்ந்து வருகின்றனர்.

இதையடுத்து, பெரும்பாலான உணவகங்களில் நான்கு பேர் அமர்ந்து சாப்பிடும் டேபிள் இருக்கும். குடும்பமாக சேர்ந்து சாப்பிடும் அளவிற்கு 15 இருக்கைகள் கொண்ட பேமிலி டேபிள் இருக்கும். தற்போது காதல் ஜோடிகளுக்கு தனியாக அமர்ந்து சாப்பிட இரண்டு இருக்கைகள் கொண்ட கப்புல்ஸ் டேபிள்களும் இருக்கிறது. பலரும் காதல் ஜோடிகளை கவர வித்தியாசமாக உணவகங்கள் தொடங்கிவிட்டனர்.

மொரட்டு சிங்கிள்களுக்கான பிரத்யேக உணவகம்!

இந்நிலையில், இதற்கு மாற்றாக நவாப் ஹோட்டல் ஒரு பகுதி முற்றிலுமாக "ஒன்லி என்ட்ரி பார் மொரட்டு சிங்கிள்ஸ்ன்னு" பெயரிடப்பட்டு இளைஞர்களுக்காக ஒதுக்கப்பட்டு, அந்த பகுதியில் ஒருவர் மட்டும் அமர்ந்து சாப்பிட ஒரு டேபிள், சேர் போடப்பட்டுள்ளது. கம்பெனி கொடுக்க யாருமின்றி கவலையோடு உணவகத்திற்கு வருபவர்கள் அந்த சிங்கிள்ஸ் சீட்டை பார்த்தவுடன் உற்சாகமாகி விடுகின்றனர்.

மேலும், உணவகத்தின் மறுபக்கம் ஸ்மார்ட் போன் கலாச்சாரத்தில் வளரும் 2கே கிட்ஸ், அவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பேமிலி டேபிள் சுற்றி 90’ஸ் கிட்ஸ் வளர்ந்த விதம், பாரம்பரிய விளையாட்டுகளான பம்பரம், பச்சை குதிரை, தாயம், கிட்டுபுல்லு, சில்லுக்கோடு, பட்டம் விடுதல், காற்றாடி விடுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை சுவரில் ஓவியங்களாக வரைந்து வைக்கப்பட்டுள்ளது.

Last Updated : Aug 3, 2019, 5:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details