மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்ட காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தவர், சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜ் (56). நேற்றிரவு (அக். 23) பணியை முடித்துவிட்டு செம்பனார்கோவிலில் உள்ள காவலர் குடியிருப்பில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.
ஏவிசி கல்லூரியைக் கடந்து விளநகர் சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனம், நேருக்கு நேர் மோதியதில் தலை குப்புற சாலையில் விழுந்து அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.