சிங்கப்பூரைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் நாகப்பட்டினம், நாகூர், முத்துப்பேட்டை, திருவாரூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இந்தியா வந்திருந்தனர்.
இதற்கிடையில் கரோனா தொற்று அச்சம் காரணமாக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் அவர்கள் அனைவரும் வந்த இடங்களிலேயே முடங்கினர். அவர்களை கணக்கெடுத்த அலுவலர்கள் அவர்கள் தங்கியிருந்த இடத்திலேயே தனிமைப்படுத்தி மருத்துவ கண்காணிப்பில் வைத்தனர்.
சிங்கப்பூர் வாசிகளை சென்னைக்கு அனுப்பிவைத்த காவல்துறையினர் இந்நிலையில் சிங்கப்பூர் அரசு இந்தியாவிற்கு வந்தவர்களை மீண்டும் சிங்கப்பூருக்கு அனுப்பிவைக்க வேண்டுமாறு கேட்டுக்கொண்டது. இதனையடுத்து தமிழ்நாட்டில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் வாசிகள் இன்று (ஏப்.9) 13 தனி பேருந்துகள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னை புறப்பட்ட சிங்கப்பூர் வாசிகளுக்கு ஏதேனும் தொற்று உள்ளதா என விசாரணை செய்த நாகப்பட்டினம் காவல்துறையினர், பின் அவர்களை பேருந்தில் ஏற்றி சென்னை விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து நாளை (ஏப்.10) அதிகாலை 3 மணி அளவில் இவர்கள் அனைவருக்கும் சென்னை விமான நிலையத்தில் முழு பரிசோதனை செய்த பிறகு தனி விமானம் மூலம் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.