மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் உள்ள வணிக நிறுவனங்களில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பை, தட்டு போன்ற பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம், நகராட்சித்துறைக்கு புகார்கள் சென்றன.
இந்தபுகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க நகராட்சி துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டார். அதனடிப்படையில், நகராட்சி ஆணையர் சுப்பையா மேற்பார்வையில், நகராட்சி சுகாதார அலுவலர் ராமையன் தலைமையில் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் மயிலாடுதுறை வண்டிக்காரத்தெரு, பேருந்துநிலையம், கூரைநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.