தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையை சீர் செய்து தரக்கோரி நூதன போராட்டம் - சாலையில் நாற்று நட்டு நூதன போராட்டம்

நாகப்பட்டினம்: மழை நீர் தேங்கி நிற்கும் சேதமடைந்த சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நூதன போராட்டம்
நூதன போராட்டம்

By

Published : Nov 18, 2020, 5:53 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அடுத்த ஏனங்குடி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இங்கு பள்ளி, கல்லூரி, வங்கி, பள்ளிவாசல் செல்லக்கூடிய கீழத்தெருவின் முக்கியச் சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது.

தற்போது தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக சேதமடைந்த சாலைகள் மழைநீர் தேங்கி குளம்போல காட்சியளிப்பதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்தை சந்தித்துவருகின்றனர்.

சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் நூதன போராட்டம்

இந்த நிலையில் சேதமடைந்த மழை நீர் தேங்கி நிற்கும் சாலையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நாற்று நட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலையை சீரமைத்து தரக்கோரி பல ஆண்டுகளாக மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மாவட்ட நிர்வாகம் உடனடியாக புதிய சாலை அமைத்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details