நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மேலப்பாதி கிராமத்தில் உள்ளது இந்து உதவி தொடக்கப்பள்ளி. இப்பள்ளியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தினரின் குழந்தைகள் 156 பேர் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 45 நாட்களுக்கு மேலாக வறுமையில் வாடிவரும் இப்பள்ளி மாணவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உதவிடும் வகையில், பள்ளி நிர்வாகம் சார்பில், அனைத்து மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
156 மாணவர்கள். சத்துணவுப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோருக்கு தலா 1000 ருபாய் வீதம் ஒரு லட்சத்து 67 ஆயிரம் ருபாய் தொகையை அப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செம்பனார்கோவில் வட்டாரக் கல்வி அலுவலர் புஷ்பலதா வழங்கினார்.
நிகழ்ச்சியில், தனி மனித இடைவெளியைக் கடைபிடித்து மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டு, தங்களுக்கு உதவிய பள்ளி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்து பணத்தை பெற்றுச் சென்றனர்.
இதையும் படிங்க:வேலை நேரத்தை 12 மணியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்!