மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா சங்கரன்பந்தலில் உள்ள முக்கிய ஆறான வீரசோழன் ஆற்றில் தற்பொழுது அதிக அளவில் தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் வீரசோழன் ஆற்றின் கரையில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக அருகில் இருந்த சங்கரன்பந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் முழுவதும் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இப்பள்ளியில் மாணவ - மாணவிகள் சுமார் 700க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். தற்போது பள்ளி வளாகங்களை சூழ்ந்த ஆற்று நீரால் பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. மேலும் பொதுப்பணித்துறை மூலம் ஆற்றில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.