தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகை அருகே சவுடு மணல் திருட்டு - லாரி, ஜேசிபி இயந்திரங்கள் பறிமுதல் - சவுடு மணல் திருட்டு

நாகை: தரங்கம்பாடி அருகே அரசு அனுமதி பெறாமல் சவுடு மண் ஏற்றிய ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

sauda-sand-theft-near-nagai-larry-jcb-machines-confiscated
sauda-sand-theft-near-nagai-larry-jcb-machines-confiscated

By

Published : Mar 15, 2020, 7:52 AM IST

நாகை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் சட்டவிரோதமாக சிலர் சவுடு மண் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொறையார் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், அங்கு மணல் ஏற்றிக் கொண்டிருந்த நான்கு லாரிகள், ஜேசிபி இயந்திரங்கள், இரண்டு இரு சக்கர வாகனங்களை மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

பின் அவர்கள் அரசு அனுமதி பெறாமல் சவுடு மணலை விற்பனை செய்தது, காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து சவுடு மணல் திருட்டில் ஈடுபட்டு வந்த காரைக்கால் பகுதியைச் சேர்ந்த செல்வகணபதி (33), மணிவேல் (27), பார்த்திபன் (30), கிளைபர் (28) ஆகியோரைக் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சவுடு மணல் திருட்டு - லாரி, ஜேசிபி இயந்திரங்கள் பறிமுதல்

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய நான்கு லாரிகள், ஜேசிபி இயந்திரங்கள், இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். அரசு அனுமதி பெறாமல் சவுடு மணல் திருட்டில் ஈடுபட்டு வந்த ஐந்து பேரை கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: குடும்பத் தகராறால் பெண் மீது ஆசிட் வீசிய மூதாட்டி!

ABOUT THE AUTHOR

...view details