நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 1930ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி ஆங்கில ஆட்சிக்கு எதிராக உப்பு சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. உப்பு சத்தியாகிரக போராட்டத்திற்கு ராஜாஜி சர்தார் வேதரத்தினம் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் உப்பு அள்ளி கைதானார்கள். அவர்கள் உப்பு அள்ளிய இடத்தில் உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 30ஆம் தேதி உப்பு அள்ளும் நிகழ்ச்சியும் உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபிக்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் நடத்தப்படுவது வழக்கம்.
உப்பு சத்தியாகிரகத்தின் 89ஆம் ஆண்டு நினைவு தினம்! - day
நாகை: வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகத்தின் 89ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஸ்தூபி அருகே உப்பு அள்ளி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அந்த வகையில், 89ஆம் ஆண்டு நினைவு பதயாத்திரை கடந்த 28ஆம் தேதி திருச்சி ராஜன்பங்களா நினைவு ஸ்தூபியில் இருந்து புறப்பட்டு வேதாரண்யத்திற்கு வந்து சேர்ந்தனர். பின்பு, ஊர்வலமாக வந்த தியாகிகள் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு கட்டடத்தில் உண்ணாநோன்பு மேற்கொண்டனர்.
இன்று, அதிகாலை வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு கட்டடத்தில் இருந்து சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் பொதுமக்கள் ஊர்வலமாக ஐந்து கிலோ மீட்டர் தூரம் சென்று அகஸ்தியன்பள்ளியில் உள்ள உப்புசத்தியாகிரக நினைவு ஸ்தூபினை அடைந்தனர். பின்பு அங்கு உப்பு அள்ளி நினைவு ஸ்தூபிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்பு, சுதந்திர வரலாற்றையும் வீரர்கள் அதற்காக சிந்திய ரத்தத்தையும் செய்த தியாகத்தையும் இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் ஊர்வலத்தில் தேசபக்தி பாடலை பாடினர்.