தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மணல் கடத்தலில் ஈடுபட்ட 11 மாட்டு வண்டிகள் பறிமுதல். - nagapattinam

நாகப்பட்டினம்: வெட்டாற்றில் அனுமதியின்றி 11 மாட்டு வண்டி மற்றும் டிராக்டரில் கடத்தி வரப்பட்ட ஆற்று மணலை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மணல் பறிமுதல்

By

Published : Apr 8, 2019, 9:41 PM IST

நாகை மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின் பெயரில் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கீழ்வேளூர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவ்வழியே வந்த 11 மாட்டு வண்டி மற்றும் டிராக்டரை சோதனை செய்ததில் அதில் வெட்டாற்றில் இருந்து அனுமதி இன்றி கடத்திவரப்பட்ட ஆற்று மணல் இருப்பது கண்டறியப்பட்டது.

மணல் பறிமுதல்
பின்னர், காவல்துறையினர் கடத்தலில் ஈடுபட்ட 8 நபரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய 11 மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details