நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து 15 நாட்களுக்கு மேல் ஆகிய நிலையில் இதுவரை காவிரி பாசன பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்ளாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
அரசு இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன் செய்யவேண்டிய தூர்வாரும் பணியை தற்போது செய்துகொண்டிருப்பதால் கூடுதல் தண்ணீர் திறக்க முடியவில்லை என தமிழ்நாடு அரசு கூறிவருகிறது. அந்த பணியை உடனடியாக நிறுத்திவிட்டு, விவசாய பணிகளைத் தொடங்க 20 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்தி ஆகஸ்ட் 31ஆம் தேதி தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் விவசாயிகளை திரட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருக்கிறோம்.