கரோனா வைரஸ் காரணமாக நாகை மாவட்டம் மயிலாடுதுறை, குத்தாலம் மற்றும் தரங்கம்பாடி தாலுகாக்களில் தஞ்சமடைந்திருந்த வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டிருந்தனர்.
இதையடுத்து மயிலாடுதுறை கோட்டத்தில் தங்கியிருந்த பிகார் மாநிலத்தை சேர்ந்த 28 பேர், ஜார்க்கண்டை சேர்ந்த 13 பேர் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த 40 பேர் என மொத்தம் 81 நபர்களை வருவாய் துறையினர் மூன்று பேருந்துகள் மூலம் சென்னை ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.