நாகை மாவட்டம் பெரிய நரியங்குடி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் நியாய விலை கடையில் அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்று தொடர்ந்து புகார் தெரிவித்துவந்தனர்.
ரேசன் அரிசி கடத்திய ஊழியரிடம் மக்கள் வாக்குவாதம்
நாகை: நியாய விலை கடையில் அரிசி கடத்திய ஊழியரை வாகனத்துடன் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள் அரிசியை பறிமுதல் செய்ததனர்.
இதற்கிடையில், நியாய விலைக் கடை ஊழியர்கள் தரமற்ற அரிசி மூட்டைகளை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து, தரமான அரிசி மூட்டைகளை கள்ள சந்தையில் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக பொதுமக்கள் நடமாற்றமற்ற மதிய வேளையில் டாட்டா ஏசி வாகனத்தின் மூலம் கடையில் உள்ள அரிசி மூட்டைகளை எடுத்துள்ளார் கடை ஊழியர் பாக்யராஜ்.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் டாட்டா ஏசி வாகனத்தை தடுத்து நிறுத்தி, பாக்யராஜூடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ரேசன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட காணொலி சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.