தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் ஒருபகுதியாக புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறையில் மழை - விவசாயிகள் மகிழ்ச்சி! வாகன ஓட்டிகள் சிரமம்! - மயிலாடுதுறையில் மழை
மயிலாடுதுறை மாவட்டத்தில் விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருவதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மழை
இதற்கிடையில் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு, குத்தாலம், தரங்கம்பாடி, பூம்புகார், சீர்காழி, செம்பனார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதனால் சம்பா பயிர்களுக்கு உகந்துள்ளது என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அங்கு பலத்த மழையும், மிதமான மழையும் மாறிமாறி பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைவதாக தெரிவித்துள்ளனர்.