காவிரி ஆறு பாயும் கடைமடை மாவட்டமான நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலின்போது மழைபெய்தது. அதன்பின்னர் தற்போது வரை மழை பெய்யவில்லை. இதனால் மாவட்டத்தில் உள்ள ஆறு, குளம், ஏரிகள் அனைத்தும் வறண்டு நிலையில், நிலத்தடி நீர் மட்டமும் கிழே சென்றுவிட்டது. இந்த நிலை மாற வேண்டும் என்றும், காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து காவிரியில் நீர் பெருக்கெடுத்து வரவேண்டி கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் ருத்ரஹோமம், வருண ஜெபம் ஆகியவை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அமிர்தவர்ஷினி, ஆனந்தபைரவி ராகங்கள் வாசிக்கப்பட்டன.
மழைவேண்டி கழுத்தளவு நீரில் வருண ஜெபம்! - mayilatudurai
நாகை: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய வேண்டி மயிலாடுதுறை ஶ்ரீ மாயூரநாதர் ஆலய தீர்த்த குளத்தில் கழுத்தளவு நீரில் நின்றபடி, வேதபாடசாலை மாணவர்கள் ஒன்பது பேர், ஒரு மணி நேரம் வருண ஜெபம் செய்தனர்.
மழைவேண்டி கழுத்தளவு நீரில் வருண ஜெபம்
மேலும், ஆலய திருக்குளத்தில் கழுத்தளவு நீரில் நின்றபடி சிவபுரம் வேத சிவாகம பாடசாலையைச் சேர்ந்த ஒன்பது மாணவர்கள் ஒருமணி நேரம் நின்று வருண மந்திரங்களை ஜெபித்து, வருண ஜெபம் செய்தனர்.