மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே சட்டநாதபுரம் கே.வி.எஸ். நகரில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட, கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரால் ஆணை வழங்கப்பட்டது. தொடர்ந்து ஒப்பந்தம் விடப்பட்டு கட்டுமான பணிகளும் தொடங்கப்பட்டது.
ஆனால் அதனைச் சுற்றி வசிக்கும் குடியிருப்புவாசிகள் சிலர் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்ததுடன், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். மேலும் கட்டுமான பணியை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பல ஆண்டுகளாக போராடி, ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதை தடுத்த தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சட்டநாதபுரம் ஊராட்சி பொதுமக்கள் இன்று (நவ. 09) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையும், ஊராட்சி மன்ற தீர்மானத்தையும் அலுவலர்கள் செயல்படுத்தாமல் அலட்சியம் செய்வதாக குற்றம் சாட்டிய கிராம மக்கள், ஆரம்ப சுகாதார நிலையத்தை விரைந்து கட்டி முடிக்கவும் கோரிக்கைவிடுத்தனர்.
இதையும் படிங்க:வேளாங்கண்ணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - பதற்றம் தணிக்க காவல்துறையினர் குவிப்பு !