நாகப்பட்டினம் மாவட்டம, சீர்காழி அடுத்த நாங்கூர் கிராமத்தில் கிளை நூலகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நூலகம் 1961ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதில்18ஆயிரத்து 133 நூல்கள் உள்ளன.நூலகம் தொடங்கிய காலத்தில் அருகில் இருந்த ஊராட்சி அலுவலகம் மின் இணைப்பு மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக நூலகத்தில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
நூலகத்தை சீரமைத்து கொடுக்க பொதுமக்கள் கோரிக்கை - Public demand
நாகப்பட்டினம்: சீர்காழி அருகே பராமரிப்பின்றி நூலகம் ஒன்று இயங்கி வருவதாகவும், அதை விரைந்து சீரமைத்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நூலகத்தை சீரமைத்து கொடுக்க பொதுமக்கள் கோரிக்கை
அதுமட்டுமல்லாமல், நூகலத்தின் மேற்கூரையும் பெயர்ந்துள்ளது. இதனால் நூலகத்திற்கு வரும் வாசகர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் மழைக் காலங்களில் மழைநீர் உள்ளே புகுந்து நூல்கள் அனைத்தும் சேதமடைகின்றது. பராமரிப்பு இன்றி செயல்படும் நூலகத்தை விரைந்து சீர்படுத்திக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.