தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு: 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!

மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு விழா நாளை(ஏப்.29) நடைபெறுவதையொட்டி, கோயிலில் பக்தர்கள் கூடுவதைத் தடுக்க 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.

144 imposed for vaitheeshwaran temple Kumbabhishekam
144 imposed for vaitheeshwaran temple Kumbabhishekam

By

Published : Apr 28, 2021, 4:53 PM IST

மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோயிலில் செவ்வாய்க்கு உரிய ஸ்தலமான வைத்தியநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை குடமுழுக்கு நடைபெற உள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக, நீதிமன்ற உத்தரவுபடியும், தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படியும் விழா நடைபெற உள்ளதால், இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு: 144 தடை உத்தரவு

எனவே குடமுழுக்கு விழாவைக் காண பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் நாளை (ஏப். 29) காலை 4 மணி முதல் 10 மணி வரை வைத்தீஸ்வரன் கோயிலில் 144 தடை அமல்படுத்தப் படுவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சீர்காழியிலிருந்து வைத்தீஸ்வரன் கோயில் வழியாக மயிலாடுதுறை செல்லும் அனைத்து போக்குவரத்தும் தடை செய்யப்பட்டு, மாற்றாக பூம்புகார் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடைகள் இன்று இரவு முதல் நாளை இரவு வரை மூடவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details