தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செம்பனார்கோவில், மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருள்கள் வழங்கல்! - Poompuhar MLA S. Paunraj

நாகை: செம்பனார்கோவிலில் சத்துணவு திட்டத்தில் மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கல்
மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கல்

By

Published : Jul 16, 2020, 6:41 PM IST

நாகை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தில் உணவு உண்ணும் பள்ளி மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி செம்பனார்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அதிமுக பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் கலந்துகொண்டு சத்துணவு உண்ணும் 117 மாணவிகளுக்கு அரிசி, பருப்பு, சீனி உள்ளிட்ட உலர் உணவுப் பொருள்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் விலையில்லா பாடபுத்தகங்களை பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளுக்கு வழங்கி தொடங்கிவைத்தார். இதில் அரசு அதிகாரிகள், பள்ளி தலைமையாசிரியர், அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:மின்கட்டண உயர்வு - திமுக சார்பில் 21இல் ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details