கரூரிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிச்சுமை அதிகரித்திருப்பதாகக் கூறி கடந்த 5ஆம் தேதி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நான்கு செவிலியர்கள் கரூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்தார்.
செவிலியர்கள் பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் - karur
நாகப்பட்டினம்: தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 4 செவிலியர்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ததைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதைக் கண்டித்து நாகப்பட்டினத்திலுள்ள அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் சுப்பிரமணியன், செவிலியர் சங்க மாநில துணை தலைவி நல்லம்மாள் உள்ளிட்ட 5 பேரின் தற்காலிக பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட செலியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.