நாகப்பட்டிணம்:மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகனப்பதிவில் பதிவு அதிகாரியின் கையொப்பத்தை ஓட்டுநர் பயிற்சி பள்ளியின் உரிமையாளர்கள் கையொப்பமிட்டு தொடர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக "எருமை மாடு படம் போட்டும், கண்களில் கண்ணீர் வருவது போல் படம் போட்டும்" நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இரண்டு போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முகவேல் மற்றும் ராம்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்டா டிராக்டர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் " எருமை மாடு படம் போட்டும் கண்களில் கண்ணீர் வருவது போல் படம் போட்டும் " இரண்டு சுவரொட்டிகள் மயிலாடுதுறை நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.
ஒட்டப்பட்ட இரண்டு போஸ்டர்களில் ஒன்றில் அவல நிலையில் மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகம் என்று தலைப்பிட்டு மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகனப்பதிவில் பதிவு அதிகாரியின் கையொப்பத்தை ஓட்டுநர் பயிற்சி பள்ளியின் உரிமையாளர்கள் கையொப்பமிட்டு தொடர் மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் தனி லஞ்ச சாம்ராஜ்யம் நடத்தி வரும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்களுக்கு உறுதுணையாக செயல்பட்டு வரும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உரிமையாகவும், எருமையாகவும், கழுதையாகவும் செயல்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம் என்று குறிப்பிட்டுருந்தனர்.
இதையும் படிங்க:சென்னை திருநின்றவூர் அருகே தண்டவாளத்தில் விரிசல்; போடிநாயக்கனூர் ரயில் சேவை தாமதம்!
மேலும், மற்றொரு போஸ்டரில் மயிலாடுதுறை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையே, மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முகவேல், மற்றும் ராம்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குற்றம் சாட்டியுள்ளனர். வெட்கக்கேடு வெட்கக்கேடு, மானக்கேடு, மானக்கேடு மாவட்ட நிர்வாகமே நடவடிக்கை எடு என்றும் அச்சடிக்கப்பட்ட சுவரொட்டிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலும் மயிலாடுதுறை நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, கிராமப்புற பகுதிகளிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த போஸ்டர் யார் ஒட்டி இருப்பார்கள் என்றும் மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரம் ஆதினம் கலைக்கல்லூரியில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தர உள்ள நிலையில் அரசு அதிகாரிகளை பற்றி ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரால் பெரும் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஓட்டிநர் பயிற்சி பள்ளிகள் செய்யும் மோசடியில் அரசு அதிகாரிகளும் சேர்ந்து கொண்டு, அந்த மோசடியை தட்டி கேக்காமல் லஞ்சம் வாங்கி கொண்டு துணைப்போவது அவ்வூர் மக்களிடயே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பொது மக்கள் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட போலீசார் தொடர்ந்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு.. அமலாக்கத்துறை மனு ஒத்திவைப்பு!