நாகப்பட்டினம் மாவட்டம் பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருப்பவர் எஸ்.பவுன்ராஜ். அதிமுகவைச் சேர்ந்த இவர், கடந்த 30ஆம் தேதி மயிலாடுதுறை புதிய மாவட்ட கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட நாகை எம்.பி., செல்வராசு, மயிலாடுதுறை எம்.பி., ராமலிங்கம் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
பூம்புகார் தொகுதி அதிமுக எம்எல்ஏவுக்கு கரோனா தொற்று - nagapatinam district news
14:46 August 05
நாகப்பட்டினம்: பூம்புகார் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பவுன்ராஜுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அதில் கலந்துகொண்ட எம்எல்ஏ பவுன்ராஜுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், அவருக்கு தொற்று உறுதியானதால், தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இவர் கடந்த 3ஆம் தேதி மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் விஜிகே. செந்தில்நாதனுடன் சேர்ந்து அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஆளுநர் பன்வாரிலால் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை நிர்வாகம்