தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக ஆட்சியில் பூம்புகார் புதுப்பொலிவு பெறும் - முன்னாள் எம்பி மஸ்தான் பேச்சு

காவிய நகரமான பூம்புகாரில் கலைநயம் மிக்க வரலாற்று சிறப்புடைய சிற்பங்கள், கட்டடங்கள் அதிமுக ஆட்சியில் பராமரிப்பின்றி சிதலமடைந்து பொலிவிழந்து காணப்படுவதாகவும், திமுக ஆட்சி ஏற்றவுடன் இவை புதிய பொலிவு பெறும் எனவும் நாகை முன்னாள் மக்களவை உறுப்பினர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

poompuhar
'திமுக ஆட்சியில் பூம்புகார் புதுப்பொலிவு பெறும்' - முன்னாள் எம்பி மஸ்தான் பேச்சு

By

Published : Feb 2, 2021, 4:45 PM IST

மயிலாடுதுறை: விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பரப்புரை பயணத்தின் ஒரு பகுதியாக தேர்தல் பரப்புரையை நாகையின் முன்னாள் மக்களவை உறுப்பினர் மஸ்தான் இன்று பூம்புகார் கடற்கரையிலுள்ள கண்ணகி சிலை முன்பு தொடங்கினார். முன்னதாக, கண்ணகி சிலைக்கு மாலை அணிவித்ததோடு, பூம்புகார் வரலாற்று சின்னங்களைப் பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “காவிய நகரமான பூம்புகாரில் கலைநயம் மிக்க வரலாற்று சிறப்புடைய சிற்பங்கள், கட்டடங்கள் அதிமுக ஆட்சியில் பராமரிப்பின்றி சிதலமடைந்து பொலிவிழந்து காணப்படுவதாகவும், திமுக ஆட்சி ஏற்றவுடன் இவை புதிய பொலிவு பெறும்” என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து அப்பகுதியில் கருவாடு விற்பனை செய்யும் மீனவப் பெண்களிடம், அப்பகுதிகளில் உள்ள குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர் செல்வம், மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன், செயலாளர் சசிகுமார் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:நாளை மறுநாள் முதல் ’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ 2ஆம் கட்ட பிரச்சாரம்!

ABOUT THE AUTHOR

...view details