நாகப்பட்டினம், கீழ்வேளூர், திருமருகல், செம்பனார்கோவில், சீர்காழி, கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியங்களில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அக்கரைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி மையத்தின் அருகாமையில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சியினரின் சுவரொட்டிகளை கிழித்து காவல் துறையினர் அப்புறப்படுத்தினர்.