தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் - நாகை கல்லூரி மாணவ மாணவிகள் சாலை மறியல் - நாகை

நாகை: பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வலியுறுத்தி, நாகையில் அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் பேரணியில் ஈடுபட்டனர். அதனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாகை கல்லூரி மாணவ மாணவிகள் சாலை மறியல்

By

Published : Mar 14, 2019, 3:10 PM IST

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வலியுறுத்தியும், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் நாகை பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மாணவர்கள் கண்டன பேரணியில் ஈடுபட்டனர்.

கல்லூரியில் இருந்து கண்டன முழக்கங்கள் எழுப்பியபடி பேரணியாக வந்த மாணவ, மாணவிகளை ஆற்றுப்பாலம் அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் காவல்துறையினருக்கும், மாணவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவ, மாணவிகள் பொள்ளாச்சி விவகாரத்தில் அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகை, செல்லூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது மெத்தனமாக செயல்படும் தமிழக அரசை கண்டித்தும், பேரணிக்கு அனுமதி மறுத்த காவல்துறையை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

நாகை கல்லூரி மாணவ மாணவிகள் சாலை மறியல்

பின்னர் மாணவர்களிடம் காவல் துணை கண்காணிப்பாளர் பத்ரி நாராயண நடத்திய பேச்சுவார்த்தையில் பேரணிக்கு முறைப்படி அனுமதி பெற்று, நாளை போராட்டம் நடத்துமாறு வேண்டுகோள் விடுத்ததையடுத்து, மாணவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். கல்லூரி மாணவர்களின் இந்த திடீர் சாலை மறியலால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நாகை செல்லூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனைதொடர்ந்து நாகை அவுரி திடலில் சில மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்துவதற்காக குவிந்தனர். அவர்களையும் காவல்துறையினர் அப்புறபடுத்தியதால், அங்கும் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details