நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா தேத்தாகுடி தெற்குப் பகுதியில், காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த இனோவா காரை மறித்து சோதனை செய்தனர்.
இலங்கைக்கு கடத்தவிருந்த 300 கிலோ கஞ்சா பறிமுதல் - கஞ்சா கடத்தல்
நாகப்பட்டினம்: வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 300 கிலோ கஞ்சாவை காருடன் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
காரில் 15 சாக்கு மூட்டைகளில், சுமார் 300 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கனகராஜ், நந்தகோபால் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இவர்களுடன் இருந்த குணசேகரன் என்பவர் தப்பியோடிவிட்டார். தப்பியோடிய குணசேகரனை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். காரிலிருந்து பல லட்சம் மதிப்புள்ள கஞ்சா மற்றும் கத்தி, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களை காவல்துறையினர் கைப்பற்றினர்.
கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்து, கனகராஜ், நந்தகோபால் ஆகிய இருவரையும் வேதாரண்யம் காவல் நிலையத்தில் வைத்து தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.