நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புதுச்சேரி - ஆலங்குடி பகுதியில் காவல் ஆய்வாளர் முருகேசன் உள்ளிட்டோர் நேற்று(அக்.08) ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆலங்குடி நான்கு சாலையில் சந்தேகத்திற்கு இடமான ஒருவர், தனது இருசக்கர வாகனத்தில் ஒரு வெள்ளை நிற கேனை ஏற்றிக்கொண்டு செல்ல முற்பட்டார்.
இதைக்கண்ட காவலர்கள், அவரைப் பிடித்து விசாரித்தபோது கேனில் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட எரிசாராயம் இருப்பது தெரிய வந்தது.
தொடர்ந்து அப்பகுதியில் சோதனை செய்தபோது கருவேலங்காட்டில் 23 வெண்மை நிற கேன்களில் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. ஆனால், காவலர்கள் வருவதைப் பார்த்த சாராய விற்பனையாளர்கள் மூன்று பேர் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதையடுத்து பிடிபட்ட ஆலங்குடியைச் சேர்ந்த ரமேஷை கைது செய்து 23 கேன்களில் உள்ள, 690 லிட்டர் எரிசாராயத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய தனபால், ராஜேந்திரன், ராஜா ஆகிய மூன்று பேரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:பேருந்து நிறுத்தத்தில் தூக்கில் தொங்கிய முதியவர்!