நாகை மாவட்டம் மயிலாடுதுறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றிவந்த உதவி ஆய்வாளர் சேகர் (56) என்பவர், நேற்று இரவு பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் கோட்டூரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது கழனிவாசல் என்ற இடத்தில் எதிரே வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சேகர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
காவல் உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் மரணம் - மயிலாடுதுறை
நாகை: மயிலாடுதுறையில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காவலர் உயிரிழப்பு
இதில் எதிரே வந்த தத்தங்குடி பகுதியைச் சேர்ந்த விஷ்வா (19) என்பவர் படுகாயங்களுடன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைவயில் சிகிச்சை பெற்றுவருகிறார். இது குறித்து பெரம்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.