நாகை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடத்திலிருந்து பூம்புகார் பகுதிக்கு ராட்சத குழாய் மூலம் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இச்சூழலில், திருநகரி திருவாலி கிராமத்தில் பாலம் கட்டும் பணியின்போது, ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
ராட்சத குழாயில் உடைப்பு; பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீண்! - நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்
நாகை: சீர்காழி அருகே ராட்சத குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பால் தினம்தோறும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகிவருவதாகவும், அதனைச் சரிசெய்ய அரசு அலுவலர்கள் முன்வருவதில்லை என்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதனால் தினந்தோறும் பல லட்சம் லிட்டர் குடிநீர் வயல்வெளிகளுக்குள் புகுந்து வீணாகிவருகிறது. ஏற்கனவே, இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில், குழாய் உடைப்பு அப்பகுதி மக்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. உடைப்பைச் சரிசெய்ய கோரிக்கை விடுத்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அலட்சியம் காட்டுவதாகவும் அம்மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இவ்விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு விரைந்து குழாய் உடைப்பைச் சரிசெய்ய வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.