மயிலாடுதுறை:தமிழ்நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நேற்று தொடங்கிய நிலையில் 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 89 பள்ளிகளில் கல்வி பயிலும் 5ஆயிரத்து 42 மாணவர்களும் 5ஆயிரத்து 353 மாணவிகள், 52 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 10 ஆயிரத்து 395 மாணவ - மாணவிகள் தேர்வை எழுதுகின்றனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இரண்டு கைகளும் இல்லாத லெட்சுமி என்ற மாணவி ஆசிரியர் உதவியுடன் பொதுத்தேர்வு எழுதினார். பிறந்தபோது இரண்டு கைகளும் இல்லாத பெண் குழந்தை என்பதால் பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டார்.