நுண்கடன் தொகையை தள்ளுபடி செய்யக்கோரி ஆக்கூர், மடப்புரம் பகுதிகளைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அலுவலர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியதாவது;

நுண்கடன் நிறுவனத்தில் பெற்ற கடன் தொகையையும் அதற்கான வட்டி தொகையையும் சரிவர திரும்ப செலுத்தி வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் கரோனா பாதிப்பால் வேலை இழந்து குடும்பத்துடன் வறுமையில் வாடுவதால் கடன் தொகையை திரும்ப செலுத்த முடியவில்லை என குறிப்பிட்ட அவர்கள் நுண்கடன் நிறுவனத்தினர் தினம்தோறும் தங்களின் வீடுகளுக்கு வந்து பணத்தை திரும்பச் செலுத்துமாறு மிரட்டுகின்றனர்.
இந்த பேரிடர் காலத்தில் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்பதால் நுண் கடன் தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.