நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியை அடுத்த கருங்கண்ணி பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணியம்மாள் (92). உயிரிழந்த இவரின் உடலை அடக்கம் செய்வதற்கு முன்பு அங்கு உள்ள அந்தோணியார் ஆலயத்திற்குள் வைத்து இறுதிச்சடங்கு திருப்பலி நடத்துவதற்காக உறவினர்கள் கொண்டுசென்றனர்.
இறந்த மூதாட்டியை கல்லறையில் அடக்கம் செய்ய எதிர்ப்பு
நாகப்பட்டினம்: உயிரிழந்த மூதாட்டியை கல்லறையில் அடக்கம் செய்ய குறிப்பிட்ட சமுதாயத்தவர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது அந்த சமுதாய மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இறந்துபோன அந்தோணியம்மாள் குடும்பத்திற்கும் அந்தச் சமுதாய மக்களுக்கும் பிரச்னை இருந்துவந்ததால் கல்லறையில் அடக்கம் செய்ய அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனால் அந்தோணியம்மாளின் உடல் ஆலயத்தின் வாசல் கேட் அருகே இரண்டு மணி நேரம் சாலை ஓரத்திலேயை வைக்கப்பட்டது. தகவலறிந்த கீழ்வேளூர் வட்டாட்சியர் கார்த்திகேயன், கிராம நிர்வாக அலுவலர் கந்தசாமி, கீழையூர் காவல் ஆய்வாளர் ஜெயந்தி தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.