கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஐந்தாம் கட்ட ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமலில் உள்ளது. அந்த வகையில் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து பேருந்துகளை இயக்க புதுச்சேரி அரசு அனுமதி அளித்த சூழலில், காரைக்கால் மாவட்டத்தில் டி.ஆர். பட்டினம், அம்பகரத்தூர், நெடுங்காடு ஆகிய பகுதிகளுக்கு மூன்று பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன.
மேலும், நகர் பகுதியில் குறைந்த அளவு பேருந்துகளே இயக்கப்பட்டு வருவதால், வேலைக்கு செல்வோர், வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவோர் என பலரும் பேருந்துகள் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் மக்கள், அவ்வழியே இயக்கப்படும் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளுக்காக பல மணி நேரம் காத்துக் கிடக்கவும், அவற்றில் முண்டியடித்து இடம் பிடித்து பயணிக்கவும் முயல்கின்றனர்.
ஏற்கனவே கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும், இறப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல், எளிதில் கரோனா பரவும் அபாயகர சூழலில் மக்கள் இவ்வாறு பயணிப்பது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க :கானல் நீரான காவிரி! - கிராம மக்களுடன் தூர்வாரி மீட்டெடுத்த ஊராட்சி மன்றத் தலைவர்!