இன்று உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை அடுத்த மேலையூரில் அமைந்துள்ள தனியார் பள்ளியும், அரசு மருத்துவமனையும் இணைந்து நடத்திய ரத்ததான முகாமில் பெற்றோர்கள், பொதுமக்கள் பங்கேற்று ரத்ததானம் செய்தனர்.
ரத்தததானம் வழங்கிய பெற்றோர்கள், பொதுமக்கள்! - nagapattinam
நாகை: உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை அருகே தனியார் பள்ளியும், அரசு மருத்துவமனையும் இணைந்து நடத்திய ரத்ததான முகாமில், பெற்றோர்கள், பொதுமக்கள் பங்கேற்று ரத்ததானம் செய்தனர்.
முகாமை மாயூரம் வழக்கறிஞர்களின் சங்க தலைவர் இராம.சேயோன்
இன்று ஒரு நாளில் மட்டும் 100 யூனிட் ரத்தம் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது பாதுகாக்கப்பட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மூலம், தேவையான ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். முகாமை மாயூரம் வழக்கறிஞர்களின் சங்கத் தலைவர் ராம.சேயோன் தொடக்கிவைத்தார்.