நாகப்பட்டினம் மாவட்டம் மன்னம்பந்தல் ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி(23). அண்மையில், இவரை ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் ராஜகோபால் சாதிரீதியாக விமர்சித்து பேசி அவமானப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத்தொடர்ந்து பிரியா பெரியசாமி மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவருக்கு ஆதரவாக சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சியை சேர்ந்த பலரும் ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்தனர். சாதிய சமூகமாய் இயங்கும் இந்தியாவில் இதுபோன்ற கொடுமைகள் நாளொரு வண்ணம் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. பெண்களுக்கெதிராக சாதி, இன, மத வெறுப்புகளை எதிர்த்து ஒரு கூட்டம் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், இதனை நீர்த்து போகும் மாய வலையை மற்றொரு கூட்டம் திட்டமிட்டு செய்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில், பிரியா பெரியசாமியை அவமானப்படுத்திய, ஊராட்சி மன்ற துணை தலைவர் அமலா மற்றும் அவரது கணவர் ராஜகோபால் மீது நடவடிக்கை எடுக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் அளித்த புகார் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், "ஊராட்சி மன்ற தலைவருக்கு ரோலிங் சேர் வாங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாதி பெயரை பயன்படுத்தி தரக்குறைவாக பேசிய ஊராட்சி மன்ற துணை தலைவர் அமலா மற்றும் அவரது கணவர் ராஜகோபால் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டம், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று ஊராட்சி செயலாளர் வெங்கடேசன், ஊராட்சி உறுப்பினர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்" என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையும் படிங்க:ஆழ்துளை கிணற்றில் விழுந்தவர்களை மீட்க ஆறு வகை கருவிகள் - அசத்தும் நாகை மெக்கானிக்!