தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம் - நெல் மூட்டைகள்

தரங்கம்பாடி அருகே நெல் கொள்முதல் நிலையத்திலிருந்த 1000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமடைந்ததாக அப்பகுதி விவசாயிகள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.

நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம்
நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம்

By

Published : Nov 11, 2021, 11:09 PM IST

மயிலாடுதுறை:தரங்கம்பாடி தாலுகா பெரம்பூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது.

இங்கு, குறுவைப் பருவத்துக்கான நெல் கொள்முதல் தொடங்கி கடந்த அக்டோபர் 6ஆம் தேதியுடன் முழுவதுமாக கொள்முதல் நிறுத்தப்பட்டது. ஆனால், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல், கிடங்குக்கு அனுப்பப்படாமல் 5000 மூட்டைகளுக்கு மேல் கொள்முதல் நிலையத்திலேயே அடுக்கி வைத்துள்ளனர்.

இந்த கொள்முதல் நிலையத்தில் மேற்கூரை வசதி உள்ள போதிலும், கூடுதலாக உள்ள 3000 மூட்டை நெல் திறந்தவெளியில் அடுக்கப்பட்டுள்ளது. இவற்றைப் பாதுகாக்க அரசு போதுமான அளவில் தார்ப்பாயை வழங்காததால், ஏற்கெனவே இருக்கின்ற தார்ப்பாய்களை வைத்து, மூடி முடிந்தவரை நெல் மூட்டைகளைக் கொள்முதல் நிலைய ஊழியர்கள் பாதுகாத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் கனமழை காரணமாக இங்கு அடுக்கிவைத்திருக்கும் நெல் மூட்டைகள் மழையில் நனையும் அவலம் ஏற்பட்டுவருகிறது.

இதில் 1000 மூட்டைகளுக்கு மேல் மழையில் நனைந்து முளைத்து வீணாகியுள்ளது. இதனால் அந்த நெல் மூட்டைகள் பசும்புல் போர்த்தியது போலப் பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது.

மழையில் நனைந்த நெல் மூட்டைகள் அனைத்திற்கும் அரசின் மெத்தனப் போக்கே காரணம் என அப்பகுதி விவசாயிகள் வேதனைத்தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:நெல்மூட்டைகளை கொண்டு செல்ல லாரி வரவில்லை.. கவலையில் விவசாயிகள்..

ABOUT THE AUTHOR

...view details