தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வயல் எலியில் மருத்துவ குணமா? 'ரூ.100க்கு 6 எலி' - அமோக விற்பனை! - Tamil latest news

நாகப்பட்டினம்: வயல் எலிகறியை சாப்பிடுவதன் மூலம் மூட்டுவலி, இடுப்புவலி நீங்கும் என்பதால், கிராம மக்கள் எலிகளை வாங்க அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.

வயல் எலி
வயல் எலி

By

Published : Feb 12, 2020, 5:58 PM IST

நாகப்பட்டினத்தில் சம்பா சாகுபடி முடிவடைந்து அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. குறிப்பாக, புலியூர் சுற்றுவட்டார பகுதி வயல்வெளிகளில் சிதறி கிடக்கும் நெல்மணிகளை உண்பதற்கு வரும் எலிகளை பிடித்து விவசாயிகள் படுஜோராக விற்பனை செய்து வருகின்றனர்.

வயல் எலி விற்பனை

வயல் எலிகறியை சாப்பிட்டால் மூட்டுவலி, இடுப்புவலி உள்ளிட்டவைகள் நீங்குவதுடன், ஒருவித மருத்துவகுணம் இருப்பதாகக் கூறி பொதுமக்கள் வாங்கி செல்வதாக விற்பனையாளர் கூறுகிறார். அவர்கள் கம்பிகளில் 2 பெரிய எலி, 4 சின்ன எலி என 6 எலிகளாக கட்டப்பட்டு ஒரு கட்டு ரூ.100க்கு விற்பனை செய்கின்றனர். இந்த வயல் எலி அரிது என்பதால், புலியூர் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

இதையும் படிங்க: ரூ.6,000 கோடி கடனில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

ABOUT THE AUTHOR

...view details