தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஜெயலலிதா ஆட்சி அமைய பாடுபடுங்கள்' - ஓ.எஸ். மணியன் - மயிலாடுதுறை அண்மைச் செய்திகள்

அமமுகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்த 250 பேரிடம், தமிழ்நாட்டில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைய பாடுபடுங்கள் என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ஓஎஸ் மணியன்
விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ஓஎஸ் மணியன்

By

Published : Jul 18, 2021, 11:22 PM IST

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவிலில் உள்ள அதிமுக அலுவலகத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் அதிமுகவில் இணையும் விழா இன்று (ஜூலை 18) நடைபெற்றது. மயிலாடுதுறை அதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.பவுன்ராஜ் தலைமையில் விழா நடைபெற்றது.

இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக குத்தாலம் வடக்கு ஒன்றிய செயலாளர் எட்வர்ட்ராஜ் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள், ஊராட்சி, கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட 250 பேர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதில் முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.எஸ். மணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ஓஎஸ் மணியன்

அப்போது அவர் பேசுகையில் , "தமிழ்நாட்டில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி அமைய பாடுபட சிறப்பாக பணியாற்ற வேண்டும்" என்றார். இதனைத் தொடர்ந்து புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் படிவத்தை வழங்கி, அதிமுக உட்கட்சித் தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்தார். விழாவில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், பாரதி, சக்தி உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க தயக்கம் ஏன்? - ஆர்.பி. உதயகுமார் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details