தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 10, 2021, 8:17 PM IST

ETV Bharat / state

திமுகவின் அச்சுறுத்தல்களை சந்திப்போம்- ஓ.எஸ்.மணியன்

அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் திமுகவை, நிமிர்ந்து நின்று சந்திப்போம் என ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.

os-maniyan-says-we-will-meet-the-threats-of-the-dmk
திமுகவின் அச்சுறுத்தல்களை நிமிர்ந்து நின்று சந்திப்போம்- ஓ.எஸ்.மணியன்

மயிலாடுதுறை:தரங்கம்பாடி தாலுகா செம்பனார் கோயில் அதிமுக கட்சி அலுவலகத்தில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அதிமுக மாவட்டச் செயலாளர் பூம்புகார் தொகுதி முன்னாள் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.எஸ். மணியன் கலந்துகொண்டு பேசினார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுக அரசு ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது கடன்சுமை, வரிவருவாய், மொத்த வருவாய், பற்றாக்குறை குறித்து வெளிப்படையாக அறிவித்துதான் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார்கள் என்றால், பானையில் இல்லை அதனால், அகப்பையில் வரவில்லை என்று சொல்வதற்காகத்தான்.

பல்வேறு இடர்பாடுகளை மக்கள் சந்திக்கும்போது மக்களை சிக்கலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பதற்காகவும், மக்கள் மகிழ்ச்சியோடு வாழவும் பல்வேறு திட்டங்களை அரசு அமல்படுத்துகிறது. அதற்கு நிதி இல்லாதபோது கடன் வாங்கி ஆட்சி நடத்துகிறோம்.

திமுகவின் அச்சுறுத்தல்களை நிமிர்ந்து நின்று சந்திப்போம்- ஓ.எஸ்.மணியன்

கடன் வாங்காத அரசு நாட்டில் எங்கு இருக்கிறது. திமுகவால், ஆட்சியை நடத்தமுடியவில்லை என்றால் அதிமுகவிடம் ஆட்சியை ஒப்படையுங்கள். வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்துவிட்டு அதிமுக இவ்வளவு கடன் வைத்திருக்கிறது எனக் கூறுவது உகந்தது அல்ல. இருப்பதை வைத்து ஆட்சி நடத்தவேண்டும்.

அதிகார துஷ்பிரயோகம் செய்யும் வகையில் திமுகவின் செயல்பாடுகள் இருக்கின்றன. கோவை மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுகவை வெற்றிபெறச் செய்தவர் முன்னாள் அமைச்சர் வேலுமணி. அந்த கோபத்தில், இன்று ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற அச்சுறுத்தல்களை அதிமுகவினர் நிமிர்ந்து நின்று சந்திப்போம்.

டெண்டர் முறைகேடு தற்போது நடக்க சாத்தியம் இல்லை. இ-டெண்டரில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். டெண்டர் முறைகேடு என்று சொல்வதை நான் ஏற்கத் தயாராக இல்லை" என்றார்.

மேலும், திமுக ஆட்சியை கைப்பற்ற விவசாயிகள் வாக்கு முக்கியம் என்பதைக் கருத்தில் கொண்டு நெல் குவிண்டாலுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்குவோம் என அறிவித்தது. இதுவரை வழங்கவில்லை. எங்கெங்கெல்லாம் நெல் அறுவடை நடக்கிறதோ அங்கெல்லாம் நெல் கொள்முதல் நிலையங்களை திமுக அரசு திறக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:எஸ்பி வேலுமணி வீட்டில் சோதனை நிறைவு - லாக்கர் சாவியை எடுத்துச்சென்ற போலீசார்

ABOUT THE AUTHOR

...view details