நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே வரதம்பட்டு ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் புதிதாக திறக்கப்பட்டது. தற்போது, மயிலாடுதுறையில் குறுவை நெல் அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை தாலுக்காவில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அதிக அளவில் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மயிலாடுதுறையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு - MLA Radhakrishnan
நாகப்பட்டினம்: மயிலாடுதுறை அருகே புதிதாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 19) வரதம்பட்டு ஊராட்சியில் புதிதாக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் முன்னிலையில் சட்டப்பேரவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார். இதன் மூலம் விவசாயிகளிடமிருந்து நாள் ஒன்றுக்கு 800 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படும் என்று மயிலாடுதுறை நூகர்பொருள் வாணிப கழத்தின் மண்டல துணை மேலாளர் தெரிவித்தார். இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.